Monday, June 9, 2008

சூரிய‌ன்..

சூரிய‌ன்..
சூரிய‌ன் என்ப‌து நட்ச‌த்திர‌ம். நாம் இர‌வில் காணும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் அனைத்தும் ஒரு சூரிய‌னே. நாம் வாழ்ந்து கொண்டு இருப்ப‌து ஒரு சூரிய‌ குடும்ப‌த்தில் ந‌ம‌க்கு தெரிகின்ற‌ சூரிய‌ன் ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌ட‌ங்கு பூமிக்கு அருகில் உள்ள‌து. என‌வே தான் ந‌மக்கு ப‌க‌லில் சூரிய‌ன் காட்சிய‌ளிக்கிற‌து.

பூமியில் இருந்து 9 கோடி 30 ல‌ட்சம் மைல்க‌ள் தொலைவில் சூரிய‌ன் உள்ள‌து. இத‌ன் விட்ட‌ம் சுமார் 8 ல‌ட்ச‌ம் 70 ஆயிர‌ம் மைல்க‌ள் ஆகும். இது ஒரு முறை த‌ன்னைத்தானே சுற்றி கொள்ள‌ 27 நாட்க‌ள் 9 ம‌ணி 7 நிமிட‌ம் எடுத்து கொள்கிற‌து.சூரிய‌ன் ம‌ற்ற‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளைப்போல் ஹைட்ர‌ஜ‌ன் வாயுக்க‌ளால் ஆன‌ நெருப்புக்கோள‌மாகும். அது த‌ன்னைத்தானே சுற்றி கொள்வ‌தால் அத‌ன் மைய‌ப்ப‌குயில் ஏற்ப‌டும் அனுச்சேர்க்கை ( Nuclear Fusion) கார‌ண‌மாக‌ அனுச்சிதைவு ஏற்ப‌ட்டு, இலேசான‌ ஹைட்ர‌ஜ‌ன் அனுக்க‌ள் க‌ன‌மான‌ ஹீலிய‌ம் அனுக்க‌ளாக‌ மாறுகின்ற‌ன. அப்ப‌டி ஹைட்ர‌ஜ‌ன் ஹீலிய‌ம் அனுக்க‌ளாக‌ மாறும் போது ஏற்ப‌டும் பொருள‌ழிவே ச‌க்தியாக‌ வெளிப்ப‌டுகிற‌து. அந்த ச‌க்தி ஹைட்ர‌ஜ‌ன் குண்டு வெடிப்பில் ஏற்ப‌டும் ச‌க்திக்கு ஒப்பான‌து.இதை விஞ்ஞானிக‌ள் ஒரு வினாடிக்குச் சூரிய‌னில் ஒரு டிரில்லிய‌ன் ப‌வுண்டு ஹைட்ர‌ஜ‌ன் அழிவ‌தாக‌க் க‌ண‌க்கிட்டுள்ளார்க‌ள்.

சூரிய‌ன் பூமியை விட‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ம‌ட‌ங்கு பெரிய‌து. சூரிய‌ன் விளிம்பு ப‌குதியில் 6,000 செ. வெப்ப‌ நிலை என்றும் மைய‌ப்ப‌குதியில் 14,000,000 செ. என்றும் க‌ண‌க்கிட்டுள்ளார்க‌ள். இதை க‌ற்ப‌னை செய்ய‌ முடிகிற‌தா?

நாம் பூமியில் பார்க்கின்ற‌ சூரிய‌ ஒளி சூரிய‌னின் மேற்ப‌ர‌ப்பில் இருந்து பூமியை வ‌ந்து அடைய‌ 8 நிமிட‌ம் 18 வினாடிக‌ள் எடுத்துக் கொள்கிற‌து. ஆனால் இந்த‌ ஒளி சூரிய‌ன் மைய‌ப்ப‌குதியில் இருந்து மேற்ப‌ர‌ப்பை வ‌ந்து அடைய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ள் எடுத்து கொள்வ‌தாக‌ விஞ்ஞான‌ம் சொல்கிற‌து.

சூரிய‌னிலிருந்து வ‌ரும் உயிரின‌ங்க‌ளுக்கு கெடுத‌ல் செய்யும் த‌ன்மையுடைய‌து. ஆனால் பூமியைச் சுற்றிக் க‌வ‌ச‌ம் போல் அமைந்துள்ள‌ காற்று ம‌ண்ட‌ல‌த்திலுள்ள‌ ஓசோன் ப‌ட‌ல‌ம் அவ‌ற்றைத் த‌டுத்து உயிர்க‌ளைக் காக்கிற‌து. சூரிய‌னிலிருந்து வ‌ரும் ஒளிக்க‌திர்க‌ள் ஆர‌ஞ்சு நிற‌மான‌து இந்த‌ ஒளிக்க‌திர்க‌ள் பூமியின் இய‌க்க‌த்திற்கு ச‌க்தி அளிக்கிற‌து. இந்த‌ ச‌க்தி பூமியில் விழுவ‌தால் தான் எங்கும் நிற‌ந்து இருக்கின்ற‌ இருள் நீங்கி ப‌க‌லை காண்கிறோம்.
அடிக்கின்ற‌ காற்று..
எழுகின்ற‌ மேக‌ம்..
பொழிகின்ற ம‌ழை..
பெய்கின்ற‌ ப‌னி..
துளிர்கின்ற‌ தாவ‌ர‌ங்க‌ள்........ இவை அனைத்திற்கும் ஒரு கார‌ண‌ம் சூரிய‌ன் தான். 9 கோடி மைல்க‌ள் அப்பால் இருந்து கொண்டு பூமியில் வாழ்கின்ற‌ உயிர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ சூரிய‌னை என்ன‌ சொல்வ‌து! இத‌னால்தான் சோதிட‌ம் இதை ம‌னித‌ வாழ்க்கையில் வெற்றியையும், ம‌கிழ்ச்சியையும், வாழ்க்கை வ‌ள‌ங்க‌ளையும் அளிக்க‌க்கூடிய‌து என்கிற‌து.

No comments: