Wednesday, April 16, 2008

எது தெய்வ‌ம் ?

எங்கும் இருப்ப‌தும், எல்லாமாக‌ இருப்ப‌தும், பிரிக்க‌ முடியாத‌தும் தான் தெய்வ‌ம்...
அத‌ற்கு என்று ஒரு வ‌டிவ‌ம் இல்லை.
இதை எப்ப‌டி ஏற்றுக்கொள்வ‌து? கீதையிலே ஒரு வார்த்தை..

"எப்பொருளிலும் என்னை காண‌ வ‌ல்ல‌வ‌ன் எவ‌னோ
அவ‌ன் உள் நான் இருக்கிறேன்"

இதை ஆழமாக‌ சிந்தித்து பாருங்க‌ள், உண்மை நிலை தெளிவு பெறும். எந்த‌ இட‌த்திலும் எந்த‌ பொருளிலும் அவ‌ன் இருப்ப‌தாக தான் இத‌ன் விள‌க்க‌ம். அப்ப‌டி என்றால் அனைத்திலும் அட‌க்க‌ம் அவ‌ன். இதை எப்ப‌டி உண‌ர்ந்து கொள்வ‌து?.

ஒரு செடியை எடுத்து கொள்ளுங்க‌ள், அது இவ்வ‌ள‌வு வ‌ள‌ர‌ வேண்டும், இப்ப‌டி இந்த‌ வ‌கையான‌ க‌னியை கொடுக்க‌ வேண்டும் என்று யார் நிர்ண‌ய‌ம் ப‌ண்ணிய‌து. அது அத‌னுடைய‌ வித்திலேயே எழுத‌ப்ப‌ட்ட‌து. அந்த‌ வித்தை குறித்த‌ நேர‌த்திலே முளைக்க‌ வைத்து அத‌னுடைய‌ ஒவ்வொரு வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ண‌ம் யார்?அது தான் அத‌ன் உள்ளே இருந்து செய‌ல்ப‌ட்டு கொண்டு இருக்கும் அறிவு.அது தான் கீதையிலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து, எந்த‌ ஒரு பொருளிலும் எந்த‌ ஒரு செய‌லிலும் அந்த‌ அறிவு வெளிப்ப‌ட்டு கொண்டு இருப்ப‌தை நாம் பார்க்க‌ தொட‌ங்கி விட்டால், உண‌ர‌ தொட‌ங்கி விட்டால், அந்த அறிவு உன் உள் இருப்ப‌தை நீ உண‌ர‌லாம்.

அப்ப‌டி எல்லா நிக‌ழ்ச்சிக‌ளுக்கும் கார‌ண‌ம் என்ன‌ என்ப‌தை ஆராய‌ முற்ப‌டும் போது எது தெய்வ‌ம், அத‌ன் செய‌ல்பாடு என்ன‌ என்று ந‌ம‌க்கு புரிய‌ தொட‌ங்கும். இதை விள‌க்கும் வ‌கையிலே பைபிளில் ஒரு வ‌ச‌ன‌ம்....

"ஆதியிலே ஒரு வார்த்தை இருந்த‌து,
அவ்வார்த்தை க‌ட‌வுளோடு இருந்த‌து,
அவ்வார்த்தை க‌ட‌வுளாக‌வும் இருந்த‌து,
அனைத்தும் அவ‌ரால் உண்டாயின‌,
உண்டாது எதுவும் அவ‌ரால் அன்றி உண்டாக‌வில்லை"


இதை ச‌ற்று உற்று க‌வ‌னியுங்க‌ள், அனைத்தும் அவ‌ரால் உண்டாயின‌, அப்ப‌டி என்றால் அந்த‌ "வார்த்தை"யை (தெய்வ‌த்தை) விட்டு பிரிந்து ஒன்றும் இல்லை. அது தான் எல்லாமாக‌ இருக்கிற‌து. அப்ப‌டி என்றால் இங்கே வார்த்தை என்று குறிப்பிடுவ‌து என்ன‌? எல்லாவ‌ற்றையும் இய‌க்கி கொண்டிருக்கும் அறிவை தான்... அந்த‌ தெய்வ‌ த‌ன்மையைதான்.....

அப்ப‌டி ந‌ம் உள் இருக்கும் அறிவை அறிந்து கொண்டால் எது தெய்வ‌ம் என்ப‌து ந‌ம‌க்கு சுல‌ப‌மாக‌ புல‌ப்ப‌டும்.

உண‌ர‌ முற்ப‌டுவோமா?
ந‌ம்முடைய‌ தொட‌க்க‌ம் எது என்று உண‌ர‌ வேண்டாமா?முய‌ற்சி செய்யுங்க‌ள்..
எட்ட‌ முடியாத‌ க‌னி அல்ல‌ அது....

"அது முழுமையான‌து". "அது அழிவ‌ற்ற‌து".
அந்த‌ முழுமையை நீ உண‌ரும் போது, நீ எதுவாக‌ இருக்கிறாய், எதுவாக‌ இருந்தாய், எதுவாக‌ இருக்க‌ போகிறாய், எதுவாக‌ இருப்பாய், உன‌க்கு அழிவு என்ப‌து உண்டா? இல்லை நீ அழிவு அற்ற‌வ‌னா என்ப‌து உன‌க்கு புல‌ப்ப‌டும்.

இதை உண‌ர்ந்த‌வர்க‌ள் உன‌க்கு வழியை காட்ட‌லாம், அதை உண‌ர‌ வேண்டிய‌து உன‌து பொறுப்பு. என‌வே தான் புல‌ன்க‌ளுக்கு எட்டாத‌ அந்த‌ அறிவை அதில் பெற்ற‌ அனுப‌வ‌ங்க‌ளை கூறும் நூல்க‌ளை வேத‌ம் என்றும் ம‌றைபொருள் என்றும் கூறினார்க‌ள்.

அந்த‌ அறிவிலே அந்த‌ தெய்வ‌ த‌ன்மையிலே அனைத்து ர‌க‌சிய‌ங்க‌ளும் உன‌க்கு புல‌ப்ப‌டும்.அப்போது தான் "நான் யார்", "நான் இந்த‌ உட‌ல் எடுத்து வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌?", எதை நான் அறிய‌ வேண்டும்?, நான் வந்த‌ நோக்க‌ம் என்ன‌? இப்ப‌டி அனைத்து வினாக்க‌ளுக்கும் விடை உன‌க்கு அங்கே.....