Sunday, June 1, 2008

நான் யார் ?

மீன்டும் எல்லோருக்கும் வ‌ண‌க்க‌ம்.

இதுவ‌ரை நாம் அடுத்த‌வ‌ர்க‌ளை பார்த்து நீ யார் என்று கேட்டு இருக்கிறோம்..
இன்று ந‌ம்மை பார்த்து நாம் கேட்போம்

"நான் யார்?".

நான் என்ற‌ ஒன்று "என‌து" என்று த‌ன‌க்கு ப‌ல்வேறு உட‌மைக‌ளை சேர்த்து கொண்ட‌து. அப்ப‌டி சேர்க்க‌ ப‌ட்ட‌வைக‌ள் பொருளாக‌வும், உயிர் ஆக‌வும் இருக்க‌லாம். என் வீடு, என் சொத்து, என் அலுவ‌ல‌க‌ம் என்று பொருள் சார்ந்ததையும் என் உற‌வுக‌ள், என் ம‌னைவி, என் ந‌ண்ப‌ன் என்று உயிர் சார்ந்த‌வைக‌ளையும், என‌து என்று சொல்லி கொண்டு இருக்கிற‌து.

நான் என்ப‌து அழியுமா?
அழிவ‌ற்ற‌தா?
நான் என்று சொல்லி கொண்டு இருப்ப‌து யார்?
இந்த‌ உட‌லா?

இந்த‌ உட‌ல் தான் என்றால் நாம் இதை ஏன் என‌து உட‌ல் என்று சொல்கிறோம். என‌து என்று வ‌ந்தாலே ஏதோ ஒன்று த‌ன்க்கு சார்ந்த‌ ஒன்றை என‌து என்று குறிப்பிடுகிற‌து. அப்ப‌டி என்றால் இந்த‌ உட‌ல் நான் அல்ல‌.
உண்மையான‌ நான் என்ப‌து அழிவ‌ற்ற‌து. புல‌ன் ம‌ய‌க்க‌த்தில் இருக்கின்ற‌ ந‌ம‌க்கு இந்த‌ உல‌க‌ம் த‌ரும் இன்ப‌த்தை அனுப‌வித்து அத‌ன் வ‌ழியே வாழ்ந்து வ‌ருவ‌தால் உண்மையான‌ நான் என்ப‌தை க‌ண்டு பிடிக்க‌ முடிய‌வில்லை. க‌ண்டு உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் கூறும் கூற்றையும் ஏற்று கொள்ள‌ முடிய‌வில்லை. கார‌ண‌ம் ம‌னித‌ன் த‌னக்கு என‌ ஒரு எல்லையை வ‌குத்து கொண்டு அதில் கிடைக்கும் இன்ப‌ங்க‌ளை ஐம்புல‌ன்க‌ள் வ‌ழியாக‌ அனுப‌வித்து கொண்டு இருக்கிறான். அதில் அள‌வு முறை மீறும் போது துன்ப‌ம் என்ற‌ உண‌ர்வு வ‌ருகின்ற‌து. அப்போது தான் தெய்வ‌ம் என்ற‌ ஒன்றை தேட‌ துவ‌ங்குகிறான். ஏன் இப்போது தேட‌ வேண்டும் எல்லாம் த‌ன்னை விட்டு போய்விடுமோ என்ற‌ ப‌ய‌ம்.

ஆனால் உண்மையில் நான் என்ப‌து அழிவற்ற‌து. ஏன் என்றால் அதுவே முழுமை நிலை.
எப்ப‌டி என்று பார்க்க‌லாம்:

உட‌ல் உட‌லினுள் உயிர் என்ற‌ ஒன்று உயிரின் சுழ‌ற்ச்சி வேக‌ம் கார‌ண‌மாக‌ அதில் இருந்து எழுவ‌து தான் ஜீவ‌ன் எனும் ஜீவ‌ காந்த‌ம். இது மூளை வ‌ழியாக செய‌ல்ப‌டும் போது ம‌ன‌மாக‌வும், புல‌ன்க‌ள் வ‌ழியாக‌ செய‌ல்ப‌டும் போது உண‌ர்வாக‌வும் இருக்கிற‌து. இந்த‌ ஜீவ‌ காந்த‌ம் ஒரு நிலையில் அட‌க்க‌ம் பெற்றால் அது நான் என்ப‌து தெளிவுக்கு வ‌ரும்.

ஜீவ‌ன் என்று த‌னியாக இய‌க்கும் போது த‌ன்க்கு ஒரு எல்லையை உருவாக்கி கொண்டு இது தான் நான் என்று நினைத்து கொண்டு இருக்கின்ற‌து. ம‌ன‌ம், த‌ன்னுள்ளே அட‌க்க‌ம் பெறும் போது, நான் என்ப‌து த‌னித்து இல்லை எல்லாம் த‌ன்க்குள்ளே இருப்ப‌தை காணும் போது, த‌ன்க்குள்ளே இறை த‌ன்மை வெளிப்ப‌டும் போது அந்த‌ இறை த‌ன்மையே நான் என்று உண‌ர்ந்து கொள்கிறான். சுருங்க‌ சொன்னால் அப்போதுதான் "இறை நிலையே நானாக‌" வ‌ந்துள்ள‌து என்ப‌தை உண‌ர‌ முடியும்.
"நான் என்ப‌து இறை நிலையே" ஆகும்.

No comments: