வேதான் விண்துகள், கோள்கள், உயிர் வகைகள் அனைத்திலும், மனிதனிடம் அமைந்துள்ள 'கருமையம்' எல்லையற்ற ஆற்றலுடையது. மொழிவழியில் இதனை "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" எனலாம். எங்கு ஒரு துளி மழை பெய்தாலும், அது நிலத்தில் விழுந்து சிறு ஓடையாகி, ஆறாகி, கடலில் கலந்து விடுவது போல, பேரியக்க மண்டலத்தில் - ஆதிநிலை முதல் பரமாணு, பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரை, அண்டங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் மனிதன் வரையில் நடைபெற்ற எல்லா இயக்கங்களும், 'காந்த அலைகளே'. ஆதலால், அவையனைத்தும் இறுகிய பதிவுகளாகத் தொடர்ந்து வந்து மனிதனிடம் இருப்பாற்றல்களாக (Potential) உள்ளன.
எனவே, அரூபமான எல்லையற்ற இறையாற்றலின் அலைவடிவிலான இயக்கங்கள் அனைத்தும், உருவத் தோற்றங்களில், சிறப்பான மனிதனிடம் உள்ள 'கருமையத்தில்' அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். இத்தகைய இயக்கப் பதிவுகள் அவ்வப்போது பேரியக்க மண்டல விரிவான தொடர்பாக இருப்பது போன்று, ஆதிநிலையிலிருந்து பரிணாமத் தொடராகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய 'கருமையம்' தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக - இயக்கக் களமாகவும் இருக்கின்றது.
Monday, August 25, 2008
விலங்கினப் பதிவு
ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-
1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.
2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.
3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன்
இன்பத்துக்காகவோ பறித்தல்.
என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.

மெளனம்
நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.
இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

கருமையப் பதிவுகள்
ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.
மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

உலகக் குடும்பம்
நாம் எல்லோரும் உலகம் என்ற மண்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை முடிப்பதற்கு இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை. நமது முன்னோர்களும் செய்ததில்லை.
எல்லாம் வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்கநியதிகளைக் கொண்டும், வான் மண்டலத்தையும், உலகையும் உருவாக்கி, இந்த அழகிய வளம் நிறைந்த உலகின் மீது நம்மையும் உருவாக்கி வாழ வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட்பேராற்றலான இயற்கை நாம் அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நமது சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும் போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?

ஆசையும் ஞானமும்
ஆசையும் அடக்கினால் அது பிதுங்கிக் கொண்டு வேறுவேறு துன்பங்களாக உருவாகும். ஆராய்ந்தால் பிறந்த இடத்திலேயே அது ஒடுங்கும். ஆசை நிறைமனமானால் மற்ற எல்லா நலன்களையும் பெறுவது எளிதாகச் சாத்தியமாகி, வாழ்வின் இலட்சியமே நிறைவேறிய ஓர் உணர்வு உண்டாகும்.
ஆசையின் மறுமலர்ச்சியே ஆறு குணங்கள். ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம். ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்). ஆசை பிற பாலை நாடி எழுந்தால் அதுவே மோகம். ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுந்தி அதைக் கொண்டு மக்களை உயர்வாக அல்லது தாழ்வாகக் கருதும் பேதம் மதம். சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.
ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத்தக்க வகையில் பண்படுத்தி - ஒழுங்குபடுத்திவிட்டால், அதுவே ஞானமாகவும் மலரும்.
யோகிராஜ் வேதாத்திரி

Tuesday, August 5, 2008
அமைதியும், ஆனந்தமும் உன் உள்ளா, உனக்கு வெளியேயா?
மனிதன் வாழும் காலத்தில் தெரிந்தோ, தெரியாமலோ அமைதியையும், ஆனந்தத்தையும் தேடுகிறான். அதற்காக வாழும் காலத்தில் பொருட்களை ஈட்டுகிறான். எனக்கு இப்படி பல செல்வங்கள் இருந்தால் நான் அமைதியாக இருப்பேன் என்று அவற்றை பெற போராடுகிறான். முடிவில் அவற்றை பெற்று கொள்கிறான். ஆனால் எதை தேடினானோ அதை தேடும்போது இருந்த அமைதி கூட அதை பெற்ற பிறகு பெறப்பட்டவனிடம் இல்லை. ஏன் வாழும் காலம் நீடிக்க நீடிக்க தன்னிடம் இருந்த அமைதியை தொலைத்து விடுகிறான். தான் தேவையானவற்றை பெற்று கொள்கிறான். தன்னுடைய வசதிகளை பெருக்கி கொள்கிறான். ஆனால் அவனிடம் அமைதியும், ஆனந்தமும் வற்றி விடுகிறது. இதற்கு காரணம் என்ன?கோவிலுக்கு செல்கிறான், அங்கே அமைதி கிடைக்கிறது என்று கூறுகிறான். அங்கே அமைதி கிடைக்கிறதா? இல்லை. அவன் அங்கே அமைதியாக இருக்கிறானா? தான் தன்னுடைய மனதை அமைதியாக வைக்காதவரை அமைதியும், ஆனந்தமும் எதில் இருந்து கிடைக்கும் என்று வெளியே தேடிக்கொண்டு இருப்பான். ஆனால் அந்த அமைதியும், ஆனந்தமும் தன்னுள் இருப்பதை பார்க்க தொடங்கிவிட்டால், தான் என்றும் போல தனக்கு தேவையானவற்றை பெருக்கி கொள்வான். ஆனால் அவற்றால் ஒரு பாதிப்பு ஏற்படாதவாறு தன்னை பாதுகாத்து கொள்வான். அந்த சூழ்நிலையில் வாழ கற்று கொண்டு விட்டால் வாழும் காலம் அமைதியும், ஆனந்தமும் தான். தன் உள்ளே இருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் பெற்று கொண்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
Labels:
அமைதி,
அமைதியும்,
ஆனந்தமும்,
ஆனந்தம்
Monday, June 9, 2008
சூரியன்..
சூரியன்..
சூரியன் என்பது நட்சத்திரம். நாம் இரவில் காணும் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு சூரியனே. நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது ஒரு சூரிய குடும்பத்தில் நமக்கு தெரிகின்ற சூரியன் பல லட்சம் மடங்கு பூமிக்கு அருகில் உள்ளது. எனவே தான் நமக்கு பகலில் சூரியன் காட்சியளிக்கிறது.
பூமியில் இருந்து 9 கோடி 30 லட்சம் மைல்கள் தொலைவில் சூரியன் உள்ளது. இதன் விட்டம் சுமார் 8 லட்சம் 70 ஆயிரம் மைல்கள் ஆகும். இது ஒரு முறை தன்னைத்தானே சுற்றி கொள்ள 27 நாட்கள் 9 மணி 7 நிமிடம் எடுத்து கொள்கிறது.சூரியன் மற்ற நட்சத்திரங்களைப்போல் ஹைட்ரஜன் வாயுக்களால் ஆன நெருப்புக்கோளமாகும். அது தன்னைத்தானே சுற்றி கொள்வதால் அதன் மையப்பகுயில் ஏற்படும் அனுச்சேர்க்கை ( Nuclear Fusion) காரணமாக அனுச்சிதைவு ஏற்பட்டு, இலேசான ஹைட்ரஜன் அனுக்கள் கனமான ஹீலியம் அனுக்களாக மாறுகின்றன. அப்படி ஹைட்ரஜன் ஹீலியம் அனுக்களாக மாறும் போது ஏற்படும் பொருளழிவே சக்தியாக வெளிப்படுகிறது. அந்த சக்தி ஹைட்ரஜன் குண்டு வெடிப்பில் ஏற்படும் சக்திக்கு ஒப்பானது.இதை விஞ்ஞானிகள் ஒரு வினாடிக்குச் சூரியனில் ஒரு டிரில்லியன் பவுண்டு ஹைட்ரஜன் அழிவதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
சூரியன் பூமியை விட பத்து லட்சம் மடங்கு பெரியது. சூரியன் விளிம்பு பகுதியில் 6,000 செ. வெப்ப நிலை என்றும் மையப்பகுதியில் 14,000,000 செ. என்றும் கணக்கிட்டுள்ளார்கள். இதை கற்பனை செய்ய முடிகிறதா?
நாம் பூமியில் பார்க்கின்ற சூரிய ஒளி சூரியனின் மேற்பரப்பில் இருந்து பூமியை வந்து அடைய 8 நிமிடம் 18 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த ஒளி சூரியன் மையப்பகுதியில் இருந்து மேற்பரப்பை வந்து அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்து கொள்வதாக விஞ்ஞானம் சொல்கிறது.
சூரியனிலிருந்து வரும் உயிரினங்களுக்கு கெடுதல் செய்யும் தன்மையுடையது. ஆனால் பூமியைச் சுற்றிக் கவசம் போல் அமைந்துள்ள காற்று மண்டலத்திலுள்ள ஓசோன் படலம் அவற்றைத் தடுத்து உயிர்களைக் காக்கிறது. சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் ஆரஞ்சு நிறமானது இந்த ஒளிக்கதிர்கள் பூமியின் இயக்கத்திற்கு சக்தி அளிக்கிறது. இந்த சக்தி பூமியில் விழுவதால் தான் எங்கும் நிறந்து இருக்கின்ற இருள் நீங்கி பகலை காண்கிறோம்.
அடிக்கின்ற காற்று..

எழுகின்ற மேகம்..
பொழிகின்ற மழை..
பெய்கின்ற பனி..
துளிர்கின்ற தாவரங்கள்........ இவை அனைத்திற்கும் ஒரு காரணம் சூரியன் தான். 9 கோடி மைல்கள் அப்பால் இருந்து கொண்டு பூமியில் வாழ்கின்ற உயிர்களுக்கு உதவுகின்ற சூரியனை என்ன சொல்வது! இதனால்தான் சோதிடம் இதை மனித வாழ்க்கையில் வெற்றியையும், மகிழ்ச்சியையும், வாழ்க்கை வளங்களையும் அளிக்கக்கூடியது என்கிறது.
Labels:
Earth,
Sun,
சூரியன்,
நட்சத்திரம்,
பகலில் சூரியன்
Sunday, June 1, 2008
நான் யார் ?
மீன்டும் எல்லோருக்கும் வணக்கம்.
இதுவரை நாம் அடுத்தவர்களை பார்த்து நீ யார் என்று கேட்டு இருக்கிறோம்..
இன்று நம்மை பார்த்து நாம் கேட்போம்
"நான் யார்?".
நான் என்ற ஒன்று "எனது" என்று தனக்கு பல்வேறு உடமைகளை சேர்த்து கொண்டது. அப்படி சேர்க்க பட்டவைகள் பொருளாகவும், உயிர் ஆகவும் இருக்கலாம். என் வீடு, என் சொத்து, என் அலுவலகம் என்று பொருள் சார்ந்ததையும் என் உறவுகள், என் மனைவி, என் நண்பன் என்று உயிர் சார்ந்தவைகளையும், எனது என்று சொல்லி கொண்டு இருக்கிறது.
நான் என்பது அழியுமா?
அழிவற்றதா?
நான் என்று சொல்லி கொண்டு இருப்பது யார்?
இந்த உடலா?
இந்த உடல் தான் என்றால் நாம் இதை ஏன் எனது உடல் என்று சொல்கிறோம். எனது என்று வந்தாலே ஏதோ ஒன்று தன்க்கு சார்ந்த ஒன்றை எனது என்று குறிப்பிடுகிறது. அப்படி என்றால் இந்த உடல் நான் அல்ல.
உண்மையான நான் என்பது அழிவற்றது. புலன் மயக்கத்தில் இருக்கின்ற நமக்கு இந்த உலகம் தரும் இன்பத்தை அனுபவித்து அதன் வழியே வாழ்ந்து வருவதால் உண்மையான நான் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. கண்டு உணர்ந்தவர்கள் கூறும் கூற்றையும் ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம் மனிதன் தனக்கு என ஒரு எல்லையை வகுத்து கொண்டு அதில் கிடைக்கும் இன்பங்களை ஐம்புலன்கள் வழியாக அனுபவித்து கொண்டு இருக்கிறான். அதில் அளவு முறை மீறும் போது துன்பம் என்ற உணர்வு வருகின்றது. அப்போது தான் தெய்வம் என்ற ஒன்றை தேட துவங்குகிறான். ஏன் இப்போது தேட வேண்டும் எல்லாம் தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயம்.
ஆனால் உண்மையில் நான் என்பது அழிவற்றது. ஏன் என்றால் அதுவே முழுமை நிலை.
எப்படி என்று பார்க்கலாம்:
உடல் உடலினுள் உயிர் என்ற ஒன்று உயிரின் சுழற்ச்சி வேகம் காரணமாக அதில் இருந்து எழுவது தான் ஜீவன் எனும் ஜீவ காந்தம். இது மூளை வழியாக செயல்படும் போது மனமாகவும், புலன்கள் வழியாக செயல்படும் போது உணர்வாகவும் இருக்கிறது. இந்த ஜீவ காந்தம் ஒரு நிலையில் அடக்கம் பெற்றால் அது நான் என்பது தெளிவுக்கு வரும்.
ஜீவன் என்று தனியாக இயக்கும் போது தன்க்கு ஒரு எல்லையை உருவாக்கி கொண்டு இது தான் நான் என்று நினைத்து கொண்டு இருக்கின்றது. மனம், தன்னுள்ளே அடக்கம் பெறும் போது, நான் என்பது தனித்து இல்லை எல்லாம் தன்க்குள்ளே இருப்பதை காணும் போது, தன்க்குள்ளே இறை தன்மை வெளிப்படும் போது அந்த இறை தன்மையே நான் என்று உணர்ந்து கொள்கிறான். சுருங்க சொன்னால் அப்போதுதான் "இறை நிலையே நானாக" வந்துள்ளது என்பதை உணர முடியும்.
"நான் என்பது இறை நிலையே" ஆகும்.

Wednesday, April 16, 2008
எது தெய்வம் ?
எங்கும் இருப்பதும், எல்லாமாக இருப்பதும், பிரிக்க முடியாததும் தான் தெய்வம்...
அதற்கு என்று ஒரு வடிவம் இல்லை.
இதை எப்படி ஏற்றுக்கொள்வது? கீதையிலே ஒரு வார்த்தை..
"எப்பொருளிலும் என்னை காண வல்லவன் எவனோ
அவன் உள் நான் இருக்கிறேன்"
இதை ஆழமாக சிந்தித்து பாருங்கள், உண்மை நிலை தெளிவு பெறும். எந்த இடத்திலும் எந்த பொருளிலும் அவன் இருப்பதாக தான் இதன் விளக்கம். அப்படி என்றால் அனைத்திலும் அடக்கம் அவன். இதை எப்படி உணர்ந்து கொள்வது?.
ஒரு செடியை எடுத்து கொள்ளுங்கள், அது இவ்வளவு வளர வேண்டும், இப்படி இந்த வகையான கனியை கொடுக்க வேண்டும் என்று யார் நிர்ணயம் பண்ணியது. அது அதனுடைய வித்திலேயே எழுதப்பட்டது. அந்த வித்தை குறித்த நேரத்திலே முளைக்க வைத்து அதனுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கு காரணம் யார்?அது தான் அதன் உள்ளே இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும் அறிவு.அது தான் கீதையிலே சொல்லப்பட்டது, எந்த ஒரு பொருளிலும் எந்த ஒரு செயலிலும் அந்த அறிவு வெளிப்பட்டு கொண்டு இருப்பதை நாம் பார்க்க தொடங்கி விட்டால், உணர தொடங்கி விட்டால், அந்த அறிவு உன் உள் இருப்பதை நீ உணரலாம்.
அப்படி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணம் என்ன என்பதை ஆராய முற்படும் போது எது தெய்வம், அதன் செயல்பாடு என்ன என்று நமக்கு புரிய தொடங்கும். இதை விளக்கும் வகையிலே பைபிளில் ஒரு வசனம்....
"ஆதியிலே ஒரு வார்த்தை இருந்தது,
அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது,
அவ்வார்த்தை கடவுளாகவும் இருந்தது,
அனைத்தும் அவரால் உண்டாயின,
உண்டாது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை"
இதை சற்று உற்று கவனியுங்கள், அனைத்தும் அவரால் உண்டாயின, அப்படி என்றால் அந்த "வார்த்தை"யை (தெய்வத்தை) விட்டு பிரிந்து ஒன்றும் இல்லை. அது தான் எல்லாமாக இருக்கிறது. அப்படி என்றால் இங்கே வார்த்தை என்று குறிப்பிடுவது என்ன? எல்லாவற்றையும் இயக்கி கொண்டிருக்கும் அறிவை தான்... அந்த தெய்வ தன்மையைதான்.....
அப்படி நம் உள் இருக்கும் அறிவை அறிந்து கொண்டால் எது தெய்வம் என்பது நமக்கு சுலபமாக புலப்படும்.
உணர முற்படுவோமா?
நம்முடைய தொடக்கம் எது என்று உணர வேண்டாமா?முயற்சி செய்யுங்கள்..
எட்ட முடியாத கனி அல்ல அது....
"அது முழுமையானது". "அது அழிவற்றது".
அந்த முழுமையை நீ உணரும் போது, நீ எதுவாக இருக்கிறாய், எதுவாக இருந்தாய், எதுவாக இருக்க போகிறாய், எதுவாக இருப்பாய், உனக்கு அழிவு என்பது உண்டா? இல்லை நீ அழிவு அற்றவனா என்பது உனக்கு புலப்படும்.
இதை உணர்ந்தவர்கள் உனக்கு வழியை காட்டலாம், அதை உணர வேண்டியது உனது பொறுப்பு. எனவே தான் புலன்களுக்கு எட்டாத அந்த அறிவை அதில் பெற்ற அனுபவங்களை கூறும் நூல்களை வேதம் என்றும் மறைபொருள் என்றும் கூறினார்கள்.
அந்த அறிவிலே அந்த தெய்வ தன்மையிலே அனைத்து ரகசியங்களும் உனக்கு புலப்படும்.அப்போது தான் "நான் யார்", "நான் இந்த உடல் எடுத்து வர காரணம் என்ன?", எதை நான் அறிய வேண்டும்?, நான் வந்த நோக்கம் என்ன? இப்படி அனைத்து வினாக்களுக்கும் விடை உனக்கு அங்கே.....

who is god,
எது தெய்வம்
Subscribe to:
Posts (Atom)